வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரசு கட்டிடங்கள்

25 January 2021, 9:49 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை குடியரசு தினம் கொண்டாபடுவதை யொட்டி சட்டப்பேரவை வளாகம் பாரதி பூங்கா தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

நாடு முழுவதும் நாளை 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது இதில் புதுச்சேரியில் குடியரசு தின விழாவானது உப்பளம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைத்தானத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் கொடியேற்றி நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை, பாரதி பூங்கா, தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள தலைவர்கள் சிலைகள் ஆகிய இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவை வளாகம் முழுவதும் வண்ண விளாக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது அதே போல் மக்கள் கூடம் அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

Views: - 4

0

0