கலை பண்பாட்டு துறை அலுவலகம் அமைக்க கிராமிய நாடக கலைஞர்கள் சங்கம் கோரிக்கை
Author: kavin kumar22 October 2021, 2:56 pm
தருமபுரி: தருமபுரியில் கலை பண்பாட்டு துறை அலுவலகம் அமைக்க வேண்டும் என கிராமிய நாடக கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்ட நாட்டுப்புற கலைஞர்களின் சங்கக் கூட்டம் அரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இசைக் கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள், நாடக கலைஞர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள்தேர்ந்தெடுத்தனர்.இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திற்கு கலை பண்பாட்டு துறை அலுவலகத்தை கொண்டு வர வேண்டும், கலை பண்பாட்டு துறை அலுவலர்கள் மாதம் ஒருமுறை கிராமிய கலைஞர்களுடன் கலந்துரையாடி, நிறை குறைகளை கேட்டு அறிய வேண்டும், அதேபோல் கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை, 50 வயது என வயது வரம்பை குறைக்க வேண்டும், மேலும் கலைகளை வளர்க்க தருமபுரி மாவட்டத்தில் ஒரு இசைப் பள்ளியை தமிழக அரசு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர். மேலும் கிராமியக் கலைஞர்களுக்கு தேவையான வசதிகளையும், கோரிக்கைகளையும் தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டுமென தருமபுரி மாவட்ட தமிழ்நாடு அனைத்து கலைத்தாய் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0