ஊராட்சிகள் தோறும் கபசுரக் குடிநீர் வழங்கி சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

14 May 2021, 3:54 pm
Quick Share

திருவள்ளூர்: அத்திப்பட்டு பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று தெருக்களில் தடுப்புகள் அமைத்து ஊராட்சிகள் தோறும் கபசுரக் குடிநீர் வழங்கி சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கை எடுக்க பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவி தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் பலர் பங்கேற்று தங்களது பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்து,

வேண்டிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டுகோள் வைத்தனர். அத்திப்பட்டு ஊராட்சியில் அதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதாகவும், சாலைகளில் தடுப்புகள் அமைத்து சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் அனைத்து ஊராட்சிகளிலும் கபசுர குடிநீர் வழங்கி மருத்துவ முகாம்களை அமைத்திட வேண்டும் என்றும், கிருமிநாசினிகள் கொண்டு சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Views: - 36

0

0