அரசு அலுவலகங்களில் பிரதமர் திருவுருவப்படம் வைக்க கோரிக்கை: மோடி படத்துடன் பா.ஜ.க.வினர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

3 November 2020, 4:37 pm
Quick Share

கோவை: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் பாரத பிரதமரின் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவுருவப்படம் வைக்க கோரி பா.ஜ.க. பட்டியல் அணி பிரிவினர் பிரதமர் மோடி படத்துடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பா.ஜ.க பட்டியல் அணி பிரிவின் தலைவர் விவேக் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவில், இந்திய நாட்டின் 14 வது பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவி வகித்து , உலக நாடுகள் வியக்கும் வண்ணம் அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் வகையில் சிறப்பானதொரு நல்லாட்சியை கொடுத்து வருவதாகவும், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் திருவுருவப்படம் வைக்க வேண்டும்

என தமிழக அரசின் 1978 ம் ஆண்டு பிறப்பித்த ஆணைப்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்த வேண்டும் என கடந்த என கடந்த 13 ஆம் தேதி அன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணித்தலைவர் பொன்.வி.பாலகணபதி தலைமையில் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மாநில பட்டியல் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனடிப்படையில் மாண்புமிகு பிரதமர் அவர்களது திருவுருவப்படத்தினை, வரக்கூடிய இரண்டு வேலை நாட்களுக்குள் வைத்து 1978 ம் ஆண்டு வெளியிட்டுள்ள தமிழக அரசின் அரசாணையை முழுமையாக செயல்படுத்த தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மனு அளிக்க வந்த பட்டியல் அணி பிரிவினர் பிரதமர் மோடி படத்துடன் வந்து உடனடியாக படத்தை அலுவலகங்களில் வைக்க வேண்டும்ஙென கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த்தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 15

0

0