தமிழகத்தில் 9 இடங்களில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தகவல்

7 September 2020, 8:06 pm
Quick Share

ஈரோடு: சாயக்கழிவு பிரச்சனையை தீர்க்கும் வகையில் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் 9 இடங்களில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கலந்து கொண்டு ஈரோடு மாவட்டத்தில் நல்லாசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகளவு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , அதே நேரத்தில் தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் சாயக்கழிவு பிரச்சனையை தீர்க்க தமிழகத்தில் 1,100 கோடி ரூபாய் மதீப்பீட்டில் 9 இடங்களில் பொதுசுத்திகரிப்பு மையம் அமைக்க மத்திய அரசுக்கு அனுமதி கேட்டு திட்ட அறிக்கை அனுப்பியுள்ளதாகவும், அதில் முதல்கட்டமாக பவானி மற்றும் விருதுநகரில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாகவும் , விரைவில் திட்டம் தொடங்கப்படும் என்றார். மற்ற இடங்களில் விரைவில் மத்திய அரசின் அனுமதி கிடைக்கும் என நம்புவதாகவும் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்தார்.

Views: - 0

0

0