வாத்து மேய்க்க கொத்தடிமைகளாக பயன்படுத்திய 5 சிறுமிகள் மீட்பு

23 October 2020, 2:38 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் வாத்து மேய்க்க கொத்தடிமைகளாக பயன்படுத்திய 5 சிறுமிகளை போலீசார் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி அருகே உள்ள கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் குழந்தைகளை அடைத்து வைத்து கொத்தடிமைகளாக பயன்படுத்துவதாக புதுச்சேரி குழந்தைகள் நல மையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று தீடீர் சேதனை செய்ததில், ஒரு வீட்டில் 5 சிறுமிகள் அடைத்து அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்களை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

மேலும் சிறுமிகளை வாத்து மேய்க்கும் தொழிலுக்கு கொத்தடிமைகளாக பயன்படுத்தியதும், தமிழகத்தை சேர்ந்த 5 சிறுமிகளை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 20

0

0