வாய்க்காலில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

12 January 2021, 4:30 pm
Quick Share

புதுச்சேரி: வாய்காலில் தவறி விழுந்த பசுமாடை தீயணைப்புத் துறையினர் மற்றும் இளைஞர்கள் மீட்டனர்.

புதுச்சேரி புறநகர பகுதியான அரசூர் குளத்துமேட்டில் உள்ள ஒரு வாய்காலில் பசுமாடு ஒன்று தவிறி விழுந்து மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வில்லியனூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அப்பகுதி இளைஞர்கள் உடன் சேர்ந்து வாய்காலில் சிக்கி தவித்த பசுமாட்டை கயிறு கட்டி வாய்காலில் இருந்து மீட்டனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் வில்லியனூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் பசுமாடை மீட்க உதவிய இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Views: - 6

0

0