ஓடிடி தளங்களுக்கும் கட்டுப்பாடு: விரைவில் வெளியாகிறது வழிகாட்டுதல் முறைகள்..!!

31 January 2021, 9:25 pm
prakash-javadekar
Quick Share

புதுடெல்லி: ஓடிடி.,யில் வெளியாகும் தொடர்கள், படங்களுக்கு கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, திரையரங்குகளில் நாளை முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

திரையரங்குகளில் மாஸ்க் அணிவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயம். தியேட்டர் டிக்கெட் முன்பதிவில் ஆன்லைன் முறையை ஊக்குவிக்க வேண்டும். விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். ஓடிடியில் வெளியாகும் சில தொடர்கள், படங்களுக்கு எதிராக ஏராளமான புகார்கள் வருகின்றன. எனவே, ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 0

0

0