வருவாய்த்துறை ஊழியார்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்…
5 August 2020, 9:36 pmஈரோடு: கொரோனோவினால் பாதிக்கப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க கோரி ஈரோட்டில் வருவாய்த்துறை ஊழியார்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கையில் வருவாய்த்துறை ஊழியார்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த 310 வருவாய்த்துறை அலுவலர்கள் கொரோனோ நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 14 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கொரோனோவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்கள் அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இது குறித்து அரசாணை வெளியிடப்படாத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்து வருவாய்த்துறை ஊழியார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் , 8 ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.