பிரபல நகைக் கடையில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை

15 September 2020, 9:24 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் பிரபல நகைக் கடையில் 15 அதிகாரிகள் வாங்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்பட்ட நகைகள் குறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையில்(மங்கள் & மங்கள்) மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நகை கடையில் தங்கம் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளது. வாங்கிய தங்கத்திற்கு முறையான ரசீது உள்ளதா ? விமானம், கப்பல் போன்றவற்றில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை வாங்கி விற்பனை செய்கிறார்களா? என்பன போன்ற சோதனைகள் நடைப்பெற்று வருகிறது. அதே போன்று வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகையானது.

முறையாக அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஜிஎஸ்டி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், இன்று மதியம் என்.எஸ்.பி சாலையில் உள்ள மங்கள் அண்ட் மங்கள் கடைக்கு வந்த 15 அதிகாரிகள் வாங்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்பட்ட நகைகள் குறித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சியில் உள்ள மேலும் சில கடைகளில் இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.