புதுச்சேரியில் இன்று 245 பேருக்கு கொரோனா…

10 August 2020, 2:09 pm
coronavirus_updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று 245 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 5,624 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் தொற்று புகுந்து அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநிலத்தில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

புதுச்சேரி மாநிலத்தில் இன்று 245 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 5,624 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 192 நபர்களுக்கும், காரைக்காலில் 6 நபர்களுக்கும், ஏனாமில் 47 நபர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2,180 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,355 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் கொரோனா தொற்றால் நேற்று 2 பேர் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5,624 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

Views: - 2

0

0