தனியார் இடத்தில் பற்றி எரியும் தீ… வனப்பகுதிக்கு பரவும் அபாயம்…
3 March 2021, 9:55 pmதிண்டுக்கல்: கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதி அருகே தனியார் இடத்தில் பற்றி எரியும் தீ எரிந்து வருவதால் வனப்பகுதிக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் தனியார் மற்றும் வனப்பகுதிகளில் மரங்கள் மற்றும் செடி கொடிகள் கருகி காணப்படுகிறது. மேலும் கொடைக்கானல் மற்றும் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தின் காரணமாகவும் சமூக விரோதிகள் சிலர் தீயை பற்றி வைத்து விடுகின்றனர். தொடர்ந்து வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதி அருகே தேன் பண்ணை பகுதியில் தனியார் இடத்தில் தீயானது பற்றி எரிந்து வருகிறது. செடி கொடிகள் கருகி காணப்படுவதால் தீ மலெ மலெ வென எரிந்து வருவதாலும் வனப்பகுதிக்குள் தீ பரவி வருகிறது.இதனால் வன விலங்குகள் சாலைகளில் உலா வர துவங்கியுள்ளது.
0
0