குடி தண்ணீர் வராத காரணத்தினால் பேருந்துகளை சிறைப்பிடித்து சாலை மறியல்

29 January 2021, 1:53 pm
Quick Share

செங்கல்பட்டு: கடந்த மூன்று மாதங்களாக குடிதண்ணீர் வராத காரணத்தினால் பேருந்துகளை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்ட மையூர் ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக குடிதண்ணீர் முறையாக அளிக்கப்படாத காரணத்தினால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்றுசேர்ந்து மையூர் மதுராந்தகம் சாலையில் காலி குடங்கள் வைத்து சாலை மறியல் செய்தனர். இதைப் பற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, மூன்று நான்கு வருடங்களாகவே எங்களுக்கு முறையான குடி தண்ணீர் விநியோகம் இல்லை ஏன்றும் எங்கள் கிராமத்தில் பக்கத்திலேயே பாலாறு ஓடுகின்றது.

அப்படி இருந்தும் கூட மையூர் ஊராட்சி அலுவலர்களின் மெத்தன போக்கால் எங்களுக்கு குடிதண்ணீர் பிரச்சனை தொடர்ந்து ஏற்படுகிறது. மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீரை விநியோக படுத்தாத இந்த ஊராட்சி அலுவலர்களை வன்மையாக கண்டிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறினார்.

Views: - 0

0

0