சாலை பாதுகாப்பு வார விழா… தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் பங்கேற்ற வாகன பேரணி…

Author: Udayaraman
7 February 2021, 5:18 pm
Quick Share

ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்கும் விதமாக தமிழ்நாடு வட்டார போக்குவரத்து துறை மற்றும் தமிழக போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு வார விழாவாக இருந்ததை மாற்றி மாத விழாவாக தற்போது தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர போக்குவரத்து துறை சார்பில் எமதர்மர் சித்திர குப்தர் உள்ளிட்ட வேடங்களை அணிந்து போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வாரவிழா பின் போது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு சாலை விதிமுறைகள் அதாவது ஹெல்மெட் அணிவதன் அவசியம் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக 2 லட்சம் கையேடுகள் வினியோகிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடப்பாண்டு 32வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில்இருசக்கர வாகன விபத்துக்களால் ஏற்படும் உயிர் பலிகளை 0% ஆக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரம்மாண்ட இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி அணை சேலம் அயோதியபட்டனம் ஏவிஎஸ் கலை அறிவியல் கல்லூரியின் செயலர் ராஜ விநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்து இரு சக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டார். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அனைத்து தரப்பினரும் குறிப்பாக வாகன ஓட்டிகளும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும் தெரிந்துகொள்ளும் விதமாக சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் தொடங்கிய பேரணி ஆனது கோரிமேடு சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அஸ்தம்பட்டி சாரதா

கல்லூரி சாலை ஐந்து ரோடு புதிய பேருந்து நிலையம் 4 ரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி இரண்டாவது அக்கரகாரம் மணல் மார்க்கெட் மிலிட்டரி அம்மாபேட்டை ரவுண்டானா மீண்டும் இரண்டாவது அக்ரஹாரம் வழியாக சேலம் மாநகராட்சி வணிக வளாகத்தை அடைந்தது. 32வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று நடத்திய பிரம்மாண்ட இருசக்கர வாகன பேரணி பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது என்பது மட்டும் நிதர்சனம்.

Views: - 42

0

0