சாலை போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

19 January 2021, 2:43 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனராக 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 30 நாட்களாக சாலை போக்குவரத்து கழகத்தில் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று சுதேசி மில் அருகே 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 0

0

0