சாலை வரியை ரத்து செய்யக்கோரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சாலை மறியல்

5 November 2020, 4:26 pm
Quick Share

புதுச்சேரி: கொரோனா காலத்திற்கு விதிக்கப்பட்டுள்ள சாலை வரியை ரத்து செய்யக்கோரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பேருந்து நிலையம் வாயலில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக அனைத்து பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது, கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு வாகனங்களை இயக்க புதுச்சேரி அனுமதி அளித்தது, இந்நிலையில் கொரோனா காலத்தில் இயக்கப்படாமல் இருந்து சுற்றுலா வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்யக்கோரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இருப்பினும் அரசு இவர்களது கோரிக்கைக்கு செவிசாய்க்காத காரணத்தால் 100க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் இன்று புதிய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சி செய்தபோது இரு தரப்பினருக்குமிடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Views: - 15

0

0