300 ஆண்டு பழைமையான கோவிலில் கொள்ளை: போலீசார் விசாரணை

Author: Udhayakumar Raman
27 July 2021, 2:29 pm
Quick Share

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே 300 ஆண்டு பழைமையான கோவிலில் நேற்றிரவு 2-உண்டியல்களை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி சாலையிலுள்ள முசுனூத்து அருகே 300 ஆண்டு பழமையான 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட வீரியகாரியம்மன் குலதெய்வ கோவிலில் உள்ளது. இந்த கோவிலுக்கு 10 -அடி சுற்று சுவருரும் அமைக்கப்பட்டுள்ளது ஆனாலும் நேற்று நள்ளிரவு சுவரேறி குதித்த கொள்ளையர்கள் கோவிலில் இருந்த இரண்டு உண்டியலையும் பெயர்த்து எடுத்து உண்டியலின் பூட்டை உடைத்து உண்டியலில் உள்ள பணம் மற்றும் ஆபர்ணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இன்று வழக்கம்போல செவ்வாய்கிழமை பூஜைக்காக வந்தபூசாரி மற்றும் நிர்வாகத்தினர் உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டைக் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு இதுகுறித்து விசாரணை செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் நிலக்கோட்டை அணைப்பட்டி மெயின் சாலையில் உள்ள 300 ஆண்டு பழமையான கோவிலில் உண்டியல்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 127

0

0