தனியார் நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து கொள்ளை: ரூபாய் 10 லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் சிசிடிவி ட்ரைவ் திருட்டு

Author: Udhayakumar Raman
14 September 2021, 4:54 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து ரூபாய் 10 லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் சிசிடிவி ட்ரைவை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் மடுகரை சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. ஜெயப்பிரபா என்பவர் கிளை மேலாளராக பணி புரிந்து வருகிறார் இவர் கடந்த சில நாட்களாக சதுர்த்தி விடுமுறையில் இருப்பதால் இதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த ஷியாமளா என்பவர் பொறுப்பை கவனித்து வந்துள்ளார். இதனிடையே அவர் இரும்பு அலமாறியில் நிறுவனத்தில் வசூலான ரூபாய் ரூ. 10 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார், பின் காலை வந்து பார்த்தபோது அலுவலகத்தின் கதவுகள் மற்றும் இரும்பு அலமாரி உடைக்கப்பட்டு உள்ளே 10 லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய் பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் பாக்ஸ் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது,

இதுகுறித்து உடனடியாக ஷியாமள ஜெயப்பிரபாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து ஜெயப்பிரபா அலுவலகத்திற்கு வந்து அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது அதில் ரெக்கார்டு பதிவாகும் சிசிடிவி ட்ரைவையும் மர்ம நபர்கள் எடுத்து சென்றிப்பது தெரியவந்தது, இந்த திருட்டு சம்பவம் குறித்து ஜெயப்பிரபா கரிக்கலாம்பாக்கம் புற காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 257

0

0