வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை: 10 சவரன் தங்க நகை 1500 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு…

9 July 2021, 7:53 pm
Quick Share

சென்னை: ஓட்டேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகை மற்றும் 1,500 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனி 10 வது தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் தாம்பரம் ஒர்க்ஷாப்பில் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உறவினர் வீடு உள்ள செய்யாறுக்கு சென்று விட்டார். தமிழ் செல்வன் நேற்று முன்தினம் தனது நண்பர் திருமணத்திற்காக கேரளா சென்று விட்டார். திருமண நிகழ்ச்சியை முடிந்து வந்து பார்த்த போது தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. வீட்டின் பால்கனி கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த் தபோது பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகை 1500 கிராம் வெள்ளி பொருட்கள் 11 ஆயிரம் ரூபாய் பணம் அனைத்தும் திருடு போயிருந்தது. இது குறித்து தமிழ்ச்செல்வன் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 121

0

0