கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளை : மர்மநபர்களுக்கு போலீசார் வலை
24 January 2021, 1:21 pmதிருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பவானி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள்அம்மனின் தங்கத்தாலி, உண்டியல் பணம் 20 ஆயிரம் ரூபாய், பூஜை பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் போந்தவாக்கம் கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் கோவிலின் பூட்டினை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி, பூஜை பொருட்கள், உண்டியல் பணம் 20 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்ட கோவில் தர்மகர்த்தா சந்திரசேகர் அதிர்ச்சி அடைந்து இது குறித்து ஆரணி காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் கிராமமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
0
0