நடுரோட்டில் கத்தியை வைத்து இரு சக்கர வாகனங்களை அடித்து உதைத்த ரவுடி கைது

16 June 2021, 11:59 pm
Quick Share

சென்னை: சென்னையில் நடுரோட்டில் கத்தியை வைத்து இரு சக்கர வாகனங்களை அடித்து உதைத்த ரவுடி மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூர் பொன்னுசாமி நகர் 3 வது தெருவைச் சேர்ந்தவர் தீபா.இவர் கடந்த 4 வருடங்களாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது கணவர் பிரேம்குமார் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரேம் குமார் முழு குடிபோதையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க மனைவி தீபாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே வீட்டை விட்டு வெளியே வந்த பிரேம் குமார் , தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தெருவில் செல்பவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளார்.

மேலும் அங்கிருந்த 7 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோவின் கண்ணாடியை அடித்து உதைத்துள்ளார். இதனால் அப்பகுதி வழியாக சென்றவர்கள் அச்சமடைந்து திரு.வி.க. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
போலீஸ் வருவதற்குள் பிரேம்குமாரும் அவரது நண்பரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த திரு.வி.க நகர் போலீசார் , செங்குன்றம் அருகே பதுங்கியிருந்த பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர் நிர்மல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த திரு.வி.க நகர் போலீசார் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 167

0

0