போலீசாரை வெட்டிய பிரபல ரவுடி இளநீர் சங்கர்: தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் சம்பவ இடத்திலே பலி

21 August 2020, 10:14 pm
Quick Share

சென்னை: அயனாவரம் அருகே போலீசாரை வெட்டிய பிரபல ரவுடி இளநீர் சங்கரை தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

சென்னை அயனாவரம் கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (எ) இளநீர் சங்கர் இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளீட்ட 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2007 ஆம் வருடம் அயனாவரத்தை சேர்ந்த ஞானம் மற்றும் நொன்டி கார்த்திக் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கர் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தனர். அதில் இருந்து தப்பிய சங்கர் ஞானம்,மற்றும் நொன்டி கார்த்திக்கை பழி தீர்க்க காத்திருந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு சங்கரின் தம்பியான கதிரவேல் எதிர் கோஷ்டினர் வெட்டி கொலை செய்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர் ஞானம் மற்றும் நொன்டி கார்த்திக் பக்கபலமாக இருந்த அவரது சித்தப்பா விஜி(எ) கஞ்சா விஜியை 2010 ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்து பழி தீர்த்தனர் சங்கர் தரப்பினர். சங்கரின் வழக்குகளை கையாண்டு வந்த பாமக வழக்கறிஞரான வன்னி சம்பத் எதிர் தரப்பினர் அந்த ஆண்டே கொலை செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அயனாவரத்தில் இருந்து வெளியேறி சங்கர் தலைமறைவாக இருந்தார். தம்பி கதிர்வேல் கொலையில் முக்கிய குற்றவாளியான யமாக பாலாஜியை 2017 ஆம் திருமுல்லைவாயல் பகுதியில் கண்டதுண்டமாக வெட்டி கொலை செய்தனர்.

அதே போல மதுரவாயலில் மாமூல் கேட்டு தராததால் பில்டிங் காண்டரக்டர் தம்பியை கொலை செய்தது என மூன்று கொலை வழக்குகள் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்து மாமூல் வசூலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக சூப்பர் மார்கெட் வாசலில் வைத்து சரவணன் என்ற காங்கிசு பிரமுகர் சரவணனை வெட்டிய வழக்கில் சங்கர் தலையீடு இருப்பதாகவும், மாமூல் கேட்டு தராத காரணத்தால் அவரை அச்சுருத்த அவரது ஆதரவாளர்களை வைத்து வெட்டியுள்ளார். இது தொடர்பாகவும் சங்கரை அயனாவரம் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சங்கர் நீலாங்கரை பகுதியில் தலைமறைவாக இருந்த இடம் தெரிந்த அவரை கைது செய்த பிடிதவிசாரணை மேற்கொண்டதில் அயனாவரம் நியூ ஆவடி சாலை ஆர்டிஓ அலுவலகம் எதிரில் முட்புதரில் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்வதாக கூறியுள்ளார். அதனை கைப்பற்ற காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் யுவராஜ், காவலர் முபாரக் மற்றும் இரண்டு காவலர்களோடு அந்த முட்புதர் பகுதிக்கு செல்லும் பொழுது அங்கு மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஆய்வாளரை தாக்க வந்துள்ளார். அப்பொழுது அதனை தடுத்த காவலர் முபாரக் மீது அரிவாள் வெட்டு விழுந்து உள்ளது.

இதனால் தற்காப்புக்காக சுட்டதில் சங்கர் வயிற்று பகுதி மேல் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலே சங்கர் உயிரிழந்தார். காயமடைந்த முபாரக் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Views: - 25

0

0