நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ரவுடி புளியந்தோப்பில் கைது

Author: kavin kumar
13 October 2021, 3:55 pm
Air Force officer Arrest -Updatenews360
Quick Share

சென்னை:பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ரவுடி புளியந்தோப்பில் கைது செய்யப்பட்டார்.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் கஸ்தூரிபாய் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (எ) பிள்ளை கார்த்திக் வயது 32. இவர் மீது பேசின்பிரிட்ஜ் , ஓட்டேரி , புளியந்தோப்பு , அயனாவரம் , ராஜமங்கலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் இவர் தொடர்ந்து சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததாகவும் அதனால் இவரை பிடிக்க நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் , புளியந்தோப்பு போலீசார் ஆடு தொட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த கார்த்திகை பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 337

0

0