காய்கறி வாகனத்தில் குட்கா கடத்திய இருவர் கைது

5 August 2020, 4:09 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காய்கறி வாகனம் எனஸ்டிக்கர் ஒட்டப்பட்டு நூதன முறையில் கடத்திவரப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் காந்திநகரில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்களை காய்கறி வாகனம் என ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் கடத்தி வந்தபோது வாகனத்துடன் அதனை பறிமுதல் செய்து பாலகுமாரன் கணேசன் உள்ளிட்ட இருவரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஆட்ட தாங்கல் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 37 குட்கா புகையிலை மூட்டைகள், சரக்கு வாகனம், இரு சக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து சோழவரம் போலீசார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை குட்கா பொருட்களை கடத்தியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Views: - 27

0

0