அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்ட பெற்றோருக்கு ரூ.1 லட்சம் பரிசு: மிசோரம் விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
22 June 2021, 2:22 pm
Quick Share

அயிஸ்வால்: தனது தொகுதியில் அதிக குழந்தைகள் பெற்று கொண்ட பெற்றோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என மிசோரம் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமவியா அறிவித்துள்ளார்.

இந்தியாவில் பல மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்கான கொள்கையை வெளியிட்டு உள்ளன. இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில் அமைச்சர் ராபர்ட் ரோமவியா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது,

எனது தொகுதி அயிஸ்வால் கிழக்கில் அதிக குழந்தைகள் கொண்ட பெற்றோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். அவர்களுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கப்படும். இதற்கு ஆகும் செலவை, எனது மகன் நடத்தும் கட்டுமான நிறுவனம் ஏற்று கொள்ளும்.

மிசோ மக்களின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் இடையே உள்ள வித்தியாசம் கவலைக்குரியதாக உள்ளது. அதற்காக, இதுபோன்ற வழிமுறையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Views: - 140

0

0