கொடைக்கனால் அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் நலத்திட்டம் : பில்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக வழங்கினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2021, 2:42 pm
Kodai Hospital-Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் அரசு மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பில்டர்ஸ் அசோசியேசன் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் அரசு மருத்துவமனைக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் பொன்ரதி தலைமை வகித்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம், தண்ணீர் தொட்டி , சக்கர நாற்காலி, சமையல் அடுப்புகள் உள்ளிட்ட 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை மருத்துவரிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர். தொடர்ந்து மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தப்பட்டது ..

Views: - 155

0

0