ஏலச்சீட்டு நடத்தி ரூ2கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை ஆணையரிடத்தில் புகார்

Author: Udayaraman
24 July 2021, 6:31 pm
Quick Share

திருச்சி: திருச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், திருச்சி மலைக்கோட்டை இபி ரோடு பகுதியை சேர்ந்த 25க்கு மேற்பட்டவர்கள் சின்னக்கடை வீதியில் கணேஷ் ஹார்ட்வேர்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வரும் நாராயணக் கோனார் என்பவரது மகன் சேகர் என்பவரிடம் ஏலச்சீட்டு போட்டிருந்தோம். இந்நிலையில் ஏலச்சீட்டு நடத்தி வந்த சேகர் சமீபத்தில் இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து வேலை செய்து சேர்ந்தவர்கள் அவரது வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டோம் சேகரின் அண்ணன் ராஜா,

அவனது தாய் ராக்காயி, மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் ஆறு மாத கழித்து பணத்தை கொடுத்து விடுவதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை எங்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட எங்களிடம் இருந்து சுமார் 2கோடி ரூபாய் வரை அவர் பெற்றுள்ளார். இந்த பணத்தை எங்களுக்கு மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Views: - 123

0

0