போலி நகைகளை வைத்து அடகு கடையில் ரூ.2 லட்சம் மோசடி: சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை..!!

1 February 2021, 4:07 pm
mosadi
Quick Share

சிவகங்கை: தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலையில் உள்ள அடகு கடையில் போலி நகைகளை வைத்து 2 லட்சம் மோசடி செய்த நபர்களை போலீசர்ர தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சரஸ்வதி வாசகசாலை தெருவில் வசித்து வரும் அழகர் மனைவி மகாலட்சுமி என்பவர் தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தான் அடகு கடை ஒன்றில் கணக்காளராக பணிபுரிகிறேன்.

கடந்த 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 33கிராம், 37 கிராம் என இரண்டு தங்க செயின்களை கொடுத்து இரண்டு லட்சம் ரூபாய் பெற்று சென்றார். அவர் போனபின் நகைகளை சோதித்து பார்த்ததில் போலி நகைகள் என்று தெரியவந்தது என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் போலீசார் கடையில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவின் மூலம் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றி சென்ற நபரை தேடி வருகின்றனர். மேலும், கவனத்துடன் இருக்குமாறு புகார் அளித்தவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Views: - 0

0

0