புகையிலைப் பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த நபர் கைது…

17 August 2020, 6:59 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை மேற்கொண்டனர். அப்போது 1,830 அட்டை பெட்டிகளில் அடுக்கி கடத்தி வரப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தாணிபூண்டி பகுதியை சேர்ந்த குமரேசன் என்பரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலையை சென்னை கொருக்குப்பேட்டை பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். இது குறித்து கவரைபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 2

0

0