தனியார் நிறுவனத்தில் ரூ 6 லட்சம் 50 ஆயிரம் மோசடி: காசாளர் கைது போலீசார் விசாரணை

17 September 2020, 10:24 pm
Quick Share

மதுரை: மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ 6 லட்சம் 50 ஆயிரம் மோசடி செய்த காசாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை காமராஜர் சாலையில் சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மதுரை ஆண்ட காலத்தில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சுப்பிரமணியம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் எங்கள் நிறுவனத்தில் கீழ மதுரை சி.எம் ஆர்.ரோட்டில் பகுதியை சேர்ந்தவர் முத்து பாண்டி என்பவர் காசாளர் வேலை பார்த்து வந்தார்.

அப்பொழுது அவர் அலுவலகத்தில் உள்ள பணத்தை ரூபாய் 6 லட்சத்து 49 ஆயிரத்து 682 ரூபாய் மோசடி செய்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக மதுரை சுப்பிரமணியம் போலீஸார் வழக்குப் செய்து முத்துப்பாண்டியன் விசாரணை நடத்தினர். இதில் அவர் அலுவலக பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மதுரை சுப்ரமணியபுரம் போலீஸார் முத்துப்பாண்டி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 6

0

0