RTPCR நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்… ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு..!

12 July 2021, 7:31 pm
Quick Share

நீலகிரி: கோவிட் 19 ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து நீலகிரி மாவட்டத் திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு RTPCR நெகடிவ் சான்றிதழ்  வைத்திருப்பவர்கள் மட்டுமே மாவட்டத்திற்குள்  வர அனுமதிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா கூறினார்.

உதகையில் இன்று செய்தியாளர்களை மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் வெளி மாநிலத்திற்கு சென்று வந்தாலும், RTPCR நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றார். கேரளா மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவி வருவதையடுத்து எல்லைப் பகுதியான கூடலூர், பந்தலூர் ப குதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும் இப்பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுவதால் இப்பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிப்பது, மாலை நேரங்களில் புகை மூட்டுவது போன்ற பணிகள்  உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.  

Views: - 42

0

0