மாநகராட்சி விரிவாக்கத்தால் 100 நாள் வேலை பறிபோகும் என வதந்தி: மாநகராட்சி விரிவாக்கம் குறித்து ஆட்சியர் விளக்கம்

Author: Udhayakumar Raman
21 September 2021, 4:58 pm
Quick Share

திருச்சி: மாநகராட்சி விரிவாக்கம் திருச்சிக்கு கண்டிப்பாக தேவையான ஒன்று என்றும், கிராமங்களில் 75% விவசாய இடங்கள் இருந்தால் கண்டிப்பாக மாநகராட்சியோடு இணைக்க முடியாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி தற்போது 65 வார்டாக உள்ளது. இதனை 100 வார்டாக விரிவாக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது குறித்து நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார். இதனை தொடர்ந்து மாநகராட்சியுடன் சில 2டவுன் பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி பகுதிகள் இனணப்பதற்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து இணைப்புக்கு எதிர்ப்புக்கு தெரிவித்து மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் கூட்ட அரங்கத்தில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு பேசுகையில், விவசாய தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிளை ஆய்வு செய்கின்றோம். மாநகராட்சி விரிவாக்கம் என்பது நம் விருப்பத்திற்கானது அல்ல, அதற்கு பல்வேறு விதிகள் உள்ளது. விதிகள் அடிப்படையில் தான் விரிவாக்கம் இருக்கும். மாநகராட்சி விரிவாக்கம் திருச்சிக்கு கண்டிப்பாக தேவையான ஒன்று 75% விவசாய இடங்கள் இருந்தால் கண்டிப்பாக மாநகராட்சியோடு இணைக்க முடியாது.100 நாள் வேலை பறிபோகும் என்று வதந்தி பரவி வருகிறது. விவசாயத்தை அடிப்படையாக கொண்டு உள்ள கிராமங்களை இணைக்க திட்டம் இல்லை, சில பகுதிகளை சேர்த்தாலும் கூட 100 நாள் வேலை போன்ற திட்டங்கள் ரத்து செய்யப்படாது என தெரிவித்தார்.

Views: - 95

0

0