எஸ்.ஜே. சூர்யாவை புகழ்ந்த பிரியா பவனி சங்கர்..!

Author: Udhayakumar Raman
8 December 2021, 7:43 pm
Quick Share

கோவை: மாநாடு படத்திற்கு முன்பே எஸ்.ஜே சூர்யா பல நல்ல திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்று நடிகை பிரியா பவானி சங்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவை கிராஸ்கட் சாலையில் அமைந்துள்ள கீர்த்திலால்ஸ் ஷோரூமில் ‘பரிதி’ என்ற பெயரில் வளையல்கள் மேளா துங்கியுள்ளது. இந்த மேளாவை நடிகை பிரியா பவானி சங்கர் இன்று துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-பாரம்பரியம் மற்றும் நவீனத்துடன் இங்கு வளையல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்று இந்த வளையல்கள் சந்தைப்பட்டுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது சிம்புவுடன் பத்து தலை படத்தில் நடித்து வருகிறேன். தனுஷ் உடன் ஒரு படம் நடித்து முடித்துள்ளேன். ஜெயம் ரவியுடனும் நடிக்கிறேன். சிம்பு, தனுஷ் இருவரும் மிகச் சிறந்த நடிகர்கள். மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நன்கு நடித்திருக்கிறார். ஆனால், அதற்கு முன்னதாகவே அவர் இறைவி போன்ற பல நல்ல படங்களை கொடுத்திருக்கிறார்.

முழுமையான திறமை அவரிடம் உள்ளது.இவர்கள் போன்ற நல்ல நடிகர்களுடன் நடிப்பது எனக்கு திரைத்துறையில் இன்னும் நிறைய பாடங்களை கற்று தருகிறது.நான் நடித்த ஓமணப்பெண்ணே என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. கொரோனா காரணத்தால் என் படம் மட்டுமில்லாமல் பல படங்களும் ஒடிடி.,யில் தான் வெளியானது.2022ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். அனைவருக்கும் தங்கள் படம் திரையரங்கில் தான் வெளியாக வேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் உதவிகரமாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் கீர்த்திலால் நிறுவனத்தின் வணிக மேம்பாட்டின் இயக்குனர் சூரஜ் சாந்தகுமார், கார்பரேட் ஆபரேஷன் இயக்குனர் பாரஸ் மேத்தா, துணை தலைவர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்.

Views: - 84

0

0