மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக தந்தை போக்சோவில் கைது

Author: kavin kumar
20 August 2021, 7:31 pm
Quick Share

சேலம்: ஆத்தூர் அருகே 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தையை போக்சோ வழக்கில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கு சில தினங்களுக்கு முன்பு வயிற்றுவலி ஏற்பட்டதால் இவரது தாய் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச்சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய், இதுகுறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவியின் தந்தை மகேந்திரன், மாணவியுடன் தகாத உறவில் இருந்ததும், அதனால் மாணவி கர்ப்பமானதும் தெரியவந்தது.இதையடுத்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், மகேந்திரனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

Views: - 331

0

0