‘அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுங்க’: மாவட்ட ஆட்சியரிடம் சமத்துவ மக்கள் கட்சியினர் மனு..!!

Author: Aarthi Sivakumar
10 January 2022, 5:36 pm
Quick Share

கோவை மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

கோவை மாவட்ட ஆட்சியரிடம் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் உபைதூர் ரஹ்மான் தலைமையில் மனு ஒன்றை அளித்தனர். அதில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 56 வது வார்டில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கழிப்பிட கழிவுநீரை கொட்டி வருவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் துர்நாற்றத்தை சுவாசித்து நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அந்தப் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் டெங்கு காய்ச்சல் பரவல் அதிக ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல 100வது வார்டு பகுதியில் தெரு நாய்கள் அதிகம் காணப்படுவதால் குழந்தைகள் மற்றும் இரவு நேரங்களில் மக்கள் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து தெரு நாய்களை பிடிக்குமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல கோவை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்களை விரைவில் சரி செய்ய கோரியும் இதனால் விபத்துகள் நிகழ ஏற்பட வாய்ப்புள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த மனுவின் போது அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஆலடி ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் செல்வபுரம் சேகர், தொண்டரணி செயலாளர் சரத் சக்தி, மகளிர் அணி துணை செயலாளர் மேரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Views: - 127

0

0