கோதண்டராமசாமி பெருமாள் கோவிலில் சமூக இடைவெளிவிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்
5 September 2020, 2:53 pmஅரியலூர்; ஊரடங்கிற்கு பிறகு திறக்கபட்ட பிரசித்தி பெற்ற அரியலூர் பெருமாள் கோவிலில் சனிக்கிழமையொட்டி ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து வந்து சமூக இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
அரியலூரிலேயே பிரசித்தி பெற்றது நகரில் உள்ள கோதண்டராமசாமி பெருமாள் கோவிலாகும். ஏனென்றால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பெருமாளையும், தேவியையும் வணங்கினால் உடனே திருமணாகும் என்பது ஐதீகம். அதேபோல் எந்த கிரக தோஷங்கள் உள்ளவர்களும் இங்கு வந்து திருமணம் செய்து கொண்டால் அனைத்தும் நிவர்த்தியாகிவிடும் என்பதால் முகூர்த்த நாட்களில் நிற்பதற்கு இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் நிற்கும். இந்நிலையில் கொரோனா காரணமாக ஐந்து மாதங்களாக மூடபட்டிருந்த திருக்கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கபட்டது. கோவில் திறக்கபட்டு முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து வந்து சமூக இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
0
0