சந்தனக்கூடு கந்தூரி விழா: ஏழை, எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கல்…

Author: Udhayakumar Raman
28 November 2021, 3:39 pm
Quick Share

திண்டுக்கல்: இஸ்லாமியர்களால் அனைத்து மதத்தினரையும் ஜாதிகளும் இல்லாமல் அனைவரையும் ஒன்றிணைக்கும் சந்தனக்கூடு கந்தூரி விழாவை கொண்டாடினர்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேகம்பூர் முகமதிய புரம், மக்கான் தெரு, அஸ்னத்புரம், பெரிய பள்ளிவாசல்தெரு, மற்றும் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்களும் கடந்த முப்பது நாட்களாக நோன்பிருந்து தொழுகை நடத்தி அனைத்து மதத்தினர் இடமும் அன்பளிப்பு பெற்று இன்று மக்கன் தெருவில் ஹஜ்ரத் முகைதீன் ஆண்டவர் நினைவை ஒட்டி கந்தூரி விழா வருடாவருடம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினர் அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும் வந்திருந்து விழாவில் கொண்டாடினர்.

இந்த விழாவில் ஜாதி, மதம் பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் அன்பளிப்பு வாங்கி முப்பது நாட்கள் நோன்பு இருந்து அனைத்து ஏழை எளிய மக்களுக்கு காலை 6 மணியில் இருந்து மாலை வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்கப்படும். அதேபோல் இறைவனுக்காக சந்தனக்கூடு தயார் செய்து இறைவனுக்கு பாத்தியா ஓதப்படும். சந்தனக்கூடு கந்தூரி விழாவில் ஜாதி மதம் பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒன்றிணைத்து மத ஒற்றுமையை ஏற்படுத்தும் வண்ணம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Views: - 163

0

0