சாதி ரீதியாக திட்டிய சுகாதார ஆய்வாளரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் தர்ணா…

8 August 2020, 9:40 am
Quick Share

கோவை: கோவையில் சாதியின் பெயரை சொல்லி தீண்டாமை வடிவில் தூய்மை பணியாளர்களை கொடுமைபடுத்தும் சுகாதாரத்துறை ஆய்வாளரை கண்டித்து அலுவலகம் முன் தர்ணா போட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரதான வாழ்வு 67 வது வார்டு ஆகும் இங்கு நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சவுரிபாளையம் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது இந்த வார்டு. இங்கு சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பவுன்ராஜ்.

இவர் அவ்வப்போது அங்கு பணியிலிருக்கும் தூய்மைப் பணியாளர்கள் தீண்டாமை என்ற நிலையில் சாதியின் பெயரில் இழிவுபடுத்துவதாக தெரிகிறது. பெண்கள் தங்களின் அவசர தேவைக்காக ஏதேனும் வெளியில் சென்றால் கூட அதனையும் மையப்படுத்தி தவறுதலாக பேசியிருப்பதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் தொடர்ந்து இதுபோன்று தீண்டாமை சம்பவங்களில் ஈடுபடும் சுகாதாரத்துறை ஆய்வாளரை கண்டித்து 67 வது வார்டு மாநகராட்சி அலுவலகம் முன்பாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்கள் பெண்கள் என திரளாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். உடனடியாக அந்த காவல் ஆய்வாளரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் அவருடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

Views: - 13

0

0