“இத பற்றி நான் யார்கிட்டயும் சொல்லல, இப்போ சொல்லுறன்” பிக்பாஸ் வந்த காரணத்தை சொன்ன சரவணன் !

27 November 2020, 2:21 pm
Quick Share

நிறம்தான் கருப்பு ஆனால் மனது முழுவதும் வெள்ளை என பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார் சித்தப்பு சரவணன். இவர் ஒரு காலத்தில் பீக் ஹீரோ. பார்ப்பதற்கு விஜயகாந்த் சாயலில் இருப்பதால் இவருக்கு படங்கள் மளமளவென குவியத் தொடங்கின.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பொண்டாட்டி ராஜ்ஜியம். அதன் மூலமாக ஏபிசி என மூன்று சென்டர்களிலும் தவிர்க்க முடியாத ஹீரோவாக வளர்ந்தார் சரவணன்.

பொண்ணுங்களை உரச தான் நான் பஸ்ல போனேன் என்று இவர் பேசியது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது.

அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டார் ஆனாலும் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். “மறைத்துப் பேசத் தெரியாமல் உண்மையை அப்படியே பேசினார் உங்க அவரை வெளியே அனுப்பி வைக்க கூடாது” என பிற்பாடு அவருக்கு ஆதரவும் கிடைத்தது.

மேலும் அவர் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என ஒரு பிரபல யூ ட்யூப் சேனலில் பகிர்ந்து கொண்டார். “இதுவரை இது குறித்து தான் யாரிடமும் கூறவில்லை என்றும் இப்பொழுதுதான் முதன் முதலாக பேசுகிறேன்” என்று ஆரம்பித்தார்.

“ஒருநாள் நான் என் இரண்டாவது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். அவர் கர்ப்பமாக இருந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.

அப்போது ஒருவர் ’உங்கள் மகள் கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேட்டார். அவரது கேள்வி எனது மனைவிக்கும் மிகவும் சங்கடத்தை தந்தது. அதன் பிறகு என் மனைவி என்னுடன் வெளியே வரவே இல்லை.

அப்போது, நான் ஏதாவது ஒரு நேரத்துல எல்லோருக்கும் நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டேன் என்பதை எல்லோரிடமும் தெரிவிப்பேன், அதன் பிறகே உன்னை நான் வெளியே காட்டுறன் என்று கூறினேன். அதற்கான சந்தர்ப்பமாகத்தான் நான் பிக்பாஸை பயன்படுத்திக்கொண்டேன்” என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.

Views: - 15

0

0