ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலில் சசிகலா சாமி தரிசனம்

28 March 2021, 1:57 pm
Quick Share

திருவாரூர்: ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.

அரசியலில் இருந்து விலகி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா தற்போது தனது கணவரின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் தங்கியுள்ளார். இந்த நிலையில் பல்வேறு கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்வதற்காக திருவாரூருக்கு நேற்று இரவு வந்து தனியார் ஹோட்டலில் சசிகலா தங்கினார்.

அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலில் உள்ள எமதர்மராஜாவை சசிகலா இன்று தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து சகலபதி இரட்டை விநாயகர் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சசிகலா திருத்துறைப்பூண்டி செல்கிறார். அங்கு தனது பழைய உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்கிறார்.

Views: - 24

0

0