சதுரகிரி கோவிலுக்கு ஆடி அமாவாசைக்கு மலையேற பக்தர்களுக்கு தடை: பக்தர்களை திருப்பி அனுப்பி வரும் காவல்துறையினர்…

Author: kavin kumar
8 August 2021, 1:26 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்கு ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். இக்கோவில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. திருக்கோவில் அமைந்துள்ள பகுதி மதுரை மாவட்டத்திலும் மலை ஏறும் அடிவாரப் பகுதியானது. தாணிப்பாறை பகுதி விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக 2015 ஆம் ஆண்டு முதல் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் வானிலை காரணமாகவும் இந்நாட்களில் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கையின் காரணமாக அதன் வீரியம் அதிகரித்து வருகிறது. இருந்தபோதிலும் நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் வராத காரணத்தினால் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும் ஆடி அமாவாசை திருவிழா தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று ஆடி அமாவாசை நடைபெற உள்ள நிலையில் கடந்த 6, 7 ,8 ,9 ஆகிய நான்கு நாட்களுக்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் பக்தர்கள் மலை ஏற அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகையால் இந்த நான்கு நாட்களிலும் யாரும் தாணிப்பாறை அடிவாரம் பகுதிக்கு வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம்,

திருக்கோவில் நிர்வாகம், காவல் துறையினர் என மூவரும் சேர்ந்து இந்த அறிவிப்பை அறிவித்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவிற்க தடை விதிக்கப்பட்ட நிலையில் கோயில் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் தரிசனத்திற்க்க வரும் பக்தர்களை 200க்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கோயில் நுழைவாயிலில் வைத்து திருப்பி அனுப்புகின்றனர்.

Views: - 163

0

0