ஆவணி மாத பெளர்ணமிக்கு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

Author: kavin kumar
18 August 2021, 5:31 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோவிலுக்கு ஆவணி மாத பெளர்ணமிக்கு மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்கு ஆவணி மாத பெளர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் இக்கோவில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. திருக்கோவில் அமைந்துள்ள பகுதி மதுரை மாவட்டத்திலும் மலை ஏறும் அடிவாரப் பகுதியானது தாணிப்பாறை பகுதி விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக 2015 ஆம் ஆண்டு முதல் அமாவாசை. பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.மேலும் வானிலை காரணமாகவும் இந்நாட்களில் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் கொரோணா இரண்டாவது அலை வேகமாக பரவிய நிலையில் தற்போது அதன் வீரியம் ஓரளவு குறைந்து வந்த போதிலும் நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் வராத காரணத்தினால் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பக்தர்கள் தரிசனத்திற்க்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டது. இதனால் சதுரகிரி கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் கடந்த மாத ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கபடவில்லை. இதன் தொடர்ச்சியாக வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆவணி மாத பெளர்ணமி வர உள்ள நிலையில் ஆகஸ்ட் 20, 21, 22, 23 ஆகிய நான்கு நாட்களுக்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் பக்தர்கள் மலை ஏற அனுமதி இல்லை எனவும் அரடிவார பகுதியான தாணிப் பாறைக்கும் வர வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Views: - 192

0

0