அமமுக பிரமுகர் கொலை வழக்கு: வேலூர் நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

23 February 2021, 10:58 am
Quick Share

வேலூர்: திருப்பத்தூரில் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், கடந்த வாரம் திருப்பத்தூரில் அமமுக பிரமுகர் வானவராயன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கௌதமபேட்டையை சங்கர் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 10 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் மேலும் 7 பேரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இன்று கொலையில் தொடர்புடைய பிரபாகரன், ரபீக், அரவிந்தன் ஆகியோர் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.-1 நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து காவல்துறையினர் அவர்களை பலத்தபாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

Views: - 7

0

0