கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்: கண்காணிப்பு பணியில் போக்குவரத்து காவல்துறை

13 November 2020, 10:20 pm
Quick Share

ஈரோடு: தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு பணியில் சத்தியமங்கலம் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை , இனிப்புகள், பட்டாசுகளை வாங்க சத்தியமங்கலம் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகன நெரிசல் காணப்படுகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் காவல்துறையினர் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் போக்குவரத்து காவல்துறையினர் கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு ஒலிபெருக்கி மூலம் முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமெனவும் வாகனங்களை முறையாக நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

Views: - 16

0

0