மலைப்பகுதியில் தக்காளி அமோக விளைச்சல்:விவசாயிகள் மகிழ்ச்சி

Author: Udayaraman
6 October 2020, 7:04 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி மற்றும் தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி அமோக விளைச்சல் ஆகியுள்ளதோடு அதற்கு நியாயமான விலையும் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி மற்றும் கர்நாடக எல்லையையொட்டி அமைந்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி அதிக அளவிலான காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதி மற்றும் மலை கிராமங்களில் உள்ள விவசாயிகள் சுமார் 300 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக போதிய தொழிலாளர்கள் கிடைக்காமல் போனதாலும், வாகன போக்குவரத்து இல்லாததாலும் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.250 முதல் ரூ.300 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்திருந்த நிலையில், தற்போது தக்காளி அமோகமாக விளைச்சல் கிடைத்திருப்பதாக தெரிவிக்கும் விவசாயிகள், கிலோ 40 ரூபாய் மற்றும் 14 கிலோ பெட்டி சுமார் 600 முதல் 700 வரை விலை போவதால் தங்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த முறை தக்காளி மூலம் நல்ல லாபம் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 33

0

0