பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து: பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு

3 March 2021, 8:22 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் படுகாயம் அடைந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 12ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. குதில் சம்பவ இடத்திலே 19 பேர் உயிரிழந்த நிலையில் அன்றே சிவகாசி அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தூர் அருகே படந்தால் பகுதியை சேர்ந்த வைஜெயந்திமாலா என்பவா உயிரிழந்தார். அதனை தொடர்ந்து கடந்த 24ம் தேதி சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுச் சூரங்குடியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி ஜெயா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிரிச்சை பெற்று வந்த மார்க்கநாதபுரம் பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுச்சூரங்குடியை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை நடுகச்சரங்குடி கிராமத்தில் மட்டும் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 1

0

0