தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து…

12 August 2020, 10:57 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் உள்ள தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத்(36) என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இதில் தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் தீக்குச்சிகள் தயாரிக்கும் பணி வழக்கம்போல நடைபெற்று வந்தது. தீக்குச்சி தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக உராய்வின் காரணமாக தீ குச்சியில் தீப்பற்றி இயந்திரம் முழுவதும் எரிந்து நாசமாயின. இதையடுத்து தகவலறிந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 12

0

0