திடீரென பெயர்ந்து விழுந்த அரசு பள்ளி மேற்கூரை:அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு….

19 August 2020, 8:37 pm
Quick Share

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாபநாசம் அய்யம்பேட்டை காவல் சரகம் மேலவழுத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் நடுநிலைப்பள்ளியில் திடீரென மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாபநாசம் வட்டம் மேல வழுத்தூர் கிராமத்தில் , ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் நடுநிலைப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இன்று திடீரென பெயர்ந்து விழுந்தது. தற்போது ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இதனால் மாணவர்கள் யாரும் அப்பகுதியில் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது தற்சமயம் இப்பள்ளியில் 50 மாணவ மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். சம்மந்தப்பட்ட பள்ளி கட்டிடம் விரிசல் அடைந்து சிதலமடைந்த மூன்று ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

இதனை சீர் செய்ய கோரி பலமுறை பள்ளி நிர்வாகமும், பெற்றோரும் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் கல்வித்துறைக்கு கடிதம் எழுதியும் இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில், இன்று இக்கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது தற்பொழுது பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை நடைபெறும் சமயம் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு அஞ்சிய பலர் இன்று தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்காமலேயே வீடு திரும்பி விட்டதாக தெரிகிறது இருப்பினும் அரசு உடனடியாக இக்கட்டிடத்தை சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 0 View

0

0