பள்ளி ஆசிரியர் வீட்டில் திருட்டு: 10 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கம் கொள்ளை

Author: kavin kumar
27 August 2021, 3:33 pm
Quick Share

சென்னை: புளியந்தோப்பில் பள்ளி ஆசிரியர் வீட்டின் பால்கனியில் எகிறி குதித்து 10 சவரன் நகை , லேப்டாப் , வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கம் கொள்ளைடியக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் லலிதா (49). இவர் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் லோகனாநாதன் எல்.ஐ.சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இரவில் லலிதா தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி விட்டு, காலை எழுந்து பார்த்து போது வீட்டின் பால்கனி் கதவு உடைக்கபட்டு வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டின் மற்றொரு அறையில் சென்று பாரத்த போது பையில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை , 25 ஆயிரம் பணம், 1 லேப்டாப், 3 செல்போன், 200 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. மேலும் , பீரோவில் இருந்த 1 லடசம் ரூபாய் பணம் அப்படியே இருந்துள்ளது. இதனையடுத்து லலிதா இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 152

0

0