நிலுவை சம்பளத்தை வழங்க கோரி பள்ளி ஆசிரியர்கள் தர்ணா

29 October 2020, 6:05 pm
Quick Share

புதுச்சேரி: நிலுவையில் உள்ள 11 மாத சம்பளத்தை வழங்க கோரி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு கடந்த டிசம்பர் முதல் சம்பளம் வழங்கப்பட வில்லை. நிலுவையில் உள்ள சம்பளம், பென்ஷன் வழங்க வலியுறுத்தி அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் இன்று கல்வித்துறை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஊதியம், ஓய்வூதியம் தரக்கோரினர். தொடர்ந்து போராட்டம் நடத்தவும் முடிவு எடுத்தனர்.

Views: - 14

0

0